Skip to content
Home » சிவபெருமான் அவதரித்த ஆதித் திருத்தலம்

சிவபெருமான் அவதரித்த ஆதித் திருத்தலம்

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை திருத்தலத்தில் அமைந்துள்ளது, மங்களநாத சுவாமி கோவில். இந்த ஆலயம் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம். * இத்தலத்தில் உள்ள மூலவரான சுயம்பு லிங்கம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது. * உத்தரகோசமங்கை கோவில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. * கயிலாயத்தை வசிப்பிடமாகவும், காசியை சிறப்பிடமாகவும் கொண்டு சிவபெருமான் வாழ்ந்ததாக புராணங்கள் கூறினாலும், அவர் அவதரித்த தலமாக உத்தரகோசமங்கை திருத்தலம் பார்க்கப்படுகிறது. * திருவிளையாடல் புராணத்தில் வரும் ‘வலை வீசி மீன் பிடித்த படலம்’ நடந்த இடம் இது. * ஆதி காலத்தில் இந்த தலம் ‘சிவபுரம்’, ‘தட்சிண கயிலாயம்’, ‘சதுர்வேதி மங்கலம்’, ‘இலந்தி கைப் பள்ளி’, ‘பத்ரிகா ஷேத்திரம்’, ‘பிரம்மபுரம்’, ‘வியாக்ரபுரம்’, ‘மங்களபுரி’, ‘பதரிசயன சத்திரம்’, ‘ஆதி சிதம்பரம்’ என வெவ்வேறு பெயர்களில் போற்றப்பட்டுள்ளது. * இத்தலத்தில் வேதவியாசர், காக புஜண்டர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், மயன், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். * இத்தலத்து பஞ்சலோக நடராஜர் மிகவும் வித்தியாசமானவர். இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப்படைப்பாகவும் உள்ளார். * மங்கள நாதர், மங்கள நாயகி இருவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால் முழுமையான பலன்கிடைக்கும். * இத்தலத்தில் வழிபாடு செய்பவர்களுக்கு இம்மையில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். மறுமையில் முக்தி கிடைக்கும். * மங்களநாதர் தலத்தில் திருமணம் செய்தால் நிறைய மங்களம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே முகூர்த்த நாட்களில் நிறைய திருமணங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன. * இத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்களில் ராவணனின் மனைவி மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது. எனவே இத்தலம் ராமாயண காலத்துக்கும் முன்பே தோன்றியதற்கான ஆதாரமாக இந்த கல்வெட்டு கருதப்படுகிறது. * இந்தக் கோவிலில் உட்பிரகாரத்திற்குள் நுழையும் இடத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய யாளி சிலைகள் உள்ளன. இவற்றின் வாயில் கல்லால் செய்யப்பட்ட பந்து உள்ளது. இதனை நாம் கையால் நகர்த்த முடியும். ஆனால் யாளியின் வாய்க்குள் இருந்து கல் பந்தை வெளியே எடுக்க இயலாது. * பிரதோஷத்தன்று இங்கு தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர். இந்தக் கோவிலில் சிவனுக்கும் அம்பாளுக் கும் தாழம்பூ மாலை கட்டிப்போட்டால் அனைத்து தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம். இதனால் திருமணம் உடனே கைகூடும். * இங்கு ஆதி காலத்து வராகி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தினங்களில் ராகு காலத்தில் தொடர்ந்து பூைஜ செய்தால் தீராத பிரச்சினைகள், திருமணத்தடை போன்றவை விலகுகின்றன. * இத்தலத்து முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. இந்திரன் தனது ஐராவதத்தை இத்தலத்தில் வைத்து முருகப்பெருமானுக்கு அளித்ததாக ‘ஆதி சிதம்பர மகாத்மியம்’ கூறுகிறது. * இத்தலத்தில் உள்ள மங்களநாதர் சன்னிதி, மங்களேசுவரி சன்னிதி, மரகதக்கல் நடராஜர் சன்னிதி, சகஸ்ரலிங்க சன்னிதி நான்கும் தனித்தனி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடிமரத்துடன் தனித்து இருக்கின்றன. * சித்திரை மாதம் திருக்கல்யாண வைபவம், வைகாசி மாதம் வசந்த உற்சவம், ஆனி மாதம் பத்துநாள் சிவ உற்சவம், ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம், மார்கழி மாதம் திருவாதிரை விழா, மாசி மாதம் சிவராத்திரி ஆகியவை இத்தலத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள் ஆகும். * உலகில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் இருக்கும் அருட் சக்திகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் சகஸ்ரலிங்கம் இங்குள்ளது. * பரத நாட்டிய கலை, சிவபெருமானால் உலக மக்களுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலம் இது. * உத்தரகோசமங்கை திருத்தலமானது, ராமருக்கு ஈசன் சிவலிங்கம் வழங்கி சேது சமுத்திரத்தில் பாலம் போட உத்தரவு வழங்கிய இடமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!