Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

10 நாட்களாக குடிநீர் முறையாக வழங்கவில்லை…. காலி குடங்களுடன் சாலை மறியல்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பொய்யாமணி ஊராட்சிக்கு உட்பட்ட திருச்சாப்பூர் கிராமத்தில் குமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

அப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு கடந்த 10 நாட்களாக காவிரி குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை.

மேலும் தெருக் குழாய்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே குடிநீர் குறைவான அளவில் வருவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதுகுறித்து பொய்யாமணி ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் இன்று காலை நங்கவரம் பெட்டவாய்த்தலை ராணி மங்கம்மா

சாலையின் குறுக்கே திருச்சாப்பூர் பேருந்து நிறுத்தத்தில் சாலையின் குறுக்கே காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறிடத்து தகவலறிந்த குளித்தலை உதவி காவல் ஆய்வாளர் ரூபினி, நங்கவரம் வருவாய் ஆய்வாளர் சக்திவேல் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தியாகராஜன் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை ஈடுபட்டு இன்று மாலைக்குள் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!