மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கி செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் சேலம் உட்கோட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
காட்பாடி முதல் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வரை ரயிலின் பின்புறம் உள்ள பொதுப்பெட்டியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வாணியம்பாடி மற்றும் ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே கழிவறை அருகே கேட்பாரற்ற நிலையில் இருந்த சோல்டர் பேக்கை ஒன்று இருந்துள்ளது.
அதனை சோதனை செய்தபோது, அதில் சுமார் 10கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து 10 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதனை ஜோலார்பேட்டை இருப்புப்பாதை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை இருப்புப்பாதை போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சாவை ரயிலில் கடத்தி வந்த நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
