Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நோ என்ட்ரியில் வந்த கார்-ஸ்தம்பிக்கும் போக்குவரத்து- வாக்குவாதம்

கோயம்புத்தூர் ஒண்டிப்புதூர் மேம்பாலம் அருகே ‘நோ என்ட்ரி’ (No Entry) அறிவிப்பைப் பொருட்படுத்தாமல் எதிர் திசையில் வந்த கார் ஓட்டுநரைக் கேள்வி கேட்ட மற்றொரு வாகன ஓட்டுநரிடம் வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவழிப் பாதையில் வாகனங்கள் விதிகளை மீறி எதிரெதிரே நுழைவதால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்து வருகிறது.

காரின் விதிமீறலால் நேருக்கு நேர் மோதும் நிலை ஏற்பட்டதைக் கண்டு, சீரான திசையில் வந்த மற்றொரு வாகன ஓட்டுநர் (டிரைவர்) காரை மறித்து இது குறித்துக் கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர், தனது தவறை உணராமல் அவரிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இச்சம்பவத்தால் மேம்பாலச் சந்தியில் பின்னால் வந்த வாகனங்கள் அனைத்தும் அணிவகுத்து நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுத் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாகத் தலையிட்டுப் போக்குவரத்தைச் சீரமைக்க முயன்றனர்.

error: Content is protected !!