Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

100% வாக்குப்பதிவு.. பொள்ளாச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது இதனையொட்டி தேர்தல் ஆணையம் சார்பில் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்

இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சார்பில் 100% வாக்குப்பதிவு

குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு பேரணியை நகராட்சி ஆணையாளர் குமரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

என் வாக்கு என் உரிமை 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும், காசுக்காக வாக்களிக்கக்கூடாது, உள்ளிட்டபல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு மத்திய பேருந்து நிலையம், புதிய திட்ட சாலை, கோவை சாலை உடுமலை சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பேரணியாக சென்றனர் .

error: Content is protected !!