Skip to content
Home » 100 ஆண்டு பழமையான மரம் வெட்டப்பட்டதால் கொந்தளித்த மக்கள்…

100 ஆண்டு பழமையான மரம் வெட்டப்பட்டதால் கொந்தளித்த மக்கள்…

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் செல்லும் வழியில் சோமந்துறை சித்தூர் பிரிவு உள்ள பில் சின்னம்பாளையம் கிராம பகுதியில் நெடுஞ்சாலை ஓரம் சுமார் 100 ஆண்டுகள் மதிக்கத்தக்க ஆலமரத்தை தனியார் வணிக வளாக பயன்பாட்டிற்காகவும் விஸ்தீரனத்திற்காகவும் வெட்ட நெடுஞ்சாலை துறை அனுமதி கொடுத்துள்ளதாக தெரிகிறது.

இதனை அடுத்து ஆலமரத்தை வெட்டும் பணிகள் துவங்கியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் பசுமை குழுவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட நபரிடம் கேட்ட பொழுது, இதற்காக அரசு சார்பில் நூறு ஆண்டுகளுக்கு மேல்

பழமை வாய்ந்த ஆலமரம் வெட்ட அனுமதி பெறப்பட்டதாகவும், அதனை முறையாக செய்வதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதனை ஏற்க மறுத்த அப்பகுதி மக்கள் மரத்தை வெட்டும் நபர்களிடம் வெட்டுவதை நிறுத்துமாறு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து அறிவுறுத்தினர். இதனை அடுத்து மரம் வெட்டும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மூதாதையர் காலத்தில் இருந்து அப்பகுதியில் இருக்கும் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தை தனியார் வணிக வளாக பயன்படுத்திற்காக எவ்வாறு வெட்டலாம் என்றும் அதற்கு எவ்வாறு அதிகாரிகள் அனுமதிக்கலாம் எனவும் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர் அப்பகுதி மக்கள். போற்றி பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய அரசே மரங்களை அழிக்கும் தனியாருக்கு துணை போவது மிகுந்த வேதனை அளிப்பதாகவும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் போராட்டங்கள் நீடிக்கும் எனவும் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!