தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழா கோலாகலமாகத் தொடங்கியது. விழாவை முன்னிட்டு, பெரிய கோயிலில் உள்ள மூலவர் பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட நறுமணத் திரவியங்களால் மகா அபிஷேகமும் சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நிகழ்வைக் காணத் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழா.. பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம்
