திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ நிறைவையொட்டி வைபவ உற்சவ மண்டபத்தில் பாரம்பரிய பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. மழை பெய்ததால் 2 கி.மீ தொலைவில் உள்ள பாரிவேட்டை மண்டபத்திற்குப் பதிலாக வைபவ மண்டபத்திலேயே இந்நிகழ்வு நடத்தப்பட்டது. தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமி சார்பில் பிரதான அர்ச்சகர் வேல் ஏந்திப் புலியை வேட்டையாடுவது போன்ற சடங்கைச் செய்து காட்டினார்.
திருப்பதி திருமலையில் பாரிவேட்டை உற்சவம் கோலாகலம்!
