Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கள்ளக்குறிச்சி அருகே மின்சாரம் தாக்கி 10ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!

கள்ளக்குறிச்சி அருகே மின்சாரம் தாக்கி 10ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே தாழ்வாகச் சென்ற மின்சாரக் கம்பியைத் தொட்டதில் 10ஆம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாணாபுரம் அருகே உள்ள ஒடியந்தல் கிராமத்தைச் சேர்ந்த உத்திராஜ் என்ற 10ஆம் வகுப்பு மாணவன், விளையாடிக் கொண்டிருந்தபோது தாழ்வாகச் சென்ற மின்சாரக் கம்பியை எதிர்பாராதவிதமாகத் தொட்டுள்ளார்.

இதில் மின்சாரம் தாக்கிய மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மாணவனின் திடீர் மரணம் அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!