Skip to content
Home » திருச்சியில் 15 வருடமா போலீசுக்கு டிமிக்கி கொடுத்த திருட்டு கும்பல் கைது…

திருச்சியில் 15 வருடமா போலீசுக்கு டிமிக்கி கொடுத்த திருட்டு கும்பல் கைது…

  • by Senthil

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே கோவத்தக்குடியை சேர்ந்த 75 வயதான அண்ணபூரணி என்ற மூதாட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளார். அப்போது அவரது கழுத்தில் சுமார் ஒன்றரை பவுன் தங்க சங்கிலி அணிந்துள்ளார். சமயபுரம் சந்தைகேட் பஸ் ஸ்டாப்பில் இறங்கி தனது கழுத்தை பார்த்தபோது தங்கச் சங்கிலி காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இது குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தொலைபேசி எண்ணிற்கு புகார் அளித்ததார். அதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவுப்படி லால்குடி மற்றும் திருவெறும்பூர் டிஎஸ்பி தலைமையில் தனிப்படை போலீசார் சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த காளியம்மாள் மற்றும் ரேகா என 2 பெண்கள்,சரவணன், சரத் என 2 ஆண்களை பிடித்து விசாரணை செய்ததில் பெயரை மாற்றி கூறியும் முன்னுக்கு பின் முரணாக பதில் சொல்லியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காவல்துறையின் சிறப்பு ஆப் செயலியான எப். ஆர். எஸ். ஆப் மூலம் சோதனை செய்தபோது ஏற்கனவே ரேகா மற்றும் காளியம்மாளுக்கு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதில் ரேகாவின் அசல் பெயர் கல்பனா என்பதும் காளியம்மாளுக்கு சுப்புலட்சுமி என்ற போலியான பெயரை கூறி திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

மேலும் பெயர்களை மாற்றி கடந்த 15 வருடமாக கோவில் திருவிழாக்கள் கூட்டம் அதிகமாக கூடும் இடங்கள்,பேருந்து உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சென்னை, கோவை, திருச்சி, திருவண்ணாமலை விழுப்புரம் அரியலூர் தஞ்சாவூர் கும்பகோணம் பல்லடம் பழனி உள்ளிட்ட தமிழக பகுதிகளிலும் சித்தூர் காளகஸ்தி திருப்பதி உள்ளிட்ட ஆந்திரா பகுதிகளிலும், புனே, குல்பர்கா, ஹாஸ் நகர், மும்பை, தானே கிழக்கு கல்யாணம் உள்ளிட்ட மகாராஷ்டிரா பகுதிகளிலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருந்துள்ளனர். திருடி சம்பாதித்த பணத்தில் பல கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளனர். இவர்கள் ஓர் இடத்தில் ஒரு வாரத்துக்கு மேல் எங்கும் தங்குவது கிடையாது.இந்த திருட்டில் ஈடுபட்ட காளியம்மாள் (45), ரேகா(43) இரண்டு பெண்களையும்,சரவணன்,சரத் என 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கும்பலிடமிருந்து 58 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி, ரூ. 26 ஆயிரம் ரொக்கம், ரூ. 3 கோடி மதிப்புள்ள பத்திர ஆவணங்கள், இரண்டு செல்போன் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து சமயபுரம் காவல் நிலையத்தில் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அனைவரையும் திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2 ல் ஆஜர்ப்படுத்தி பெண்களை திருச்சி பெண்கள் சிறையிலும்,ஆண்களை திருச்சி மத்திய சிறையிலும் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!