Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழ்நாட்டில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

  • தென்காசி மாவட்ட ஆட்சியராக ரஞ்சித் சிங், திண்டுக்கல் ஆட்சியராக துர்கா மூர்த்தி நியமனம்
  • ஆளுநரின் செயலாளராக சஜ்ஜன் சிங் சவானை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு
  • உயர்கல்வித்துறை செயலாளராக ராஷ்மி சித்தார்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கரூர் மாநகராட்சி ஆணையராக பிருத்விராஜ், தஞ்சை மாநகராட்சி ஆணையராக தீபானா விஸ்வேஸ்வரி நியமனம்
  • கடலூர் மாநகராட்சி ஆணையராக கிஷன்குமார், சென்னை மாநகராட்சி (பணிகள்) இணை ஆணையராக சரவணன் நியமனம்
  • மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலாளராக குமாரவேல் பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஆவின் ஆணையராக அஜித் யாதவ், நில சீர்திருத்தத் துறை ஆணையராக ஹர் சஹாய் மீனா நியமனம்
  • தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய இணை மேலாண் இயக்குநராக சிவகிருஷ்ணமூர்த்தி நியமனம்
  • தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை மேலாண் இயக்குநராக அனாமிகா நியமனம்
  • தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இயக்குநராக ரத்தினசாமி நியமிக்கப்பட்டுள்ளார்
  • தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக ஜான் லூயிஸ் நியமனம்
  • தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் இயக்குநராக விஜயா ராணி நியமனம்
  • தமிழ்நாடு சிமென்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக சந்திரகலா நியமனம்
  • எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையின் இயக்குநராக ஆர்.சுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக விசாகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
error: Content is protected !!