டில்லியில் ஸ்லீப்பர் பேருந்தில் 16 வயது பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பேருந்து ஓட்டுநர், நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட பேருந்தை பறிமுதல் செய்து தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். தலைநகர் டெல்லியில் தொடரும் தொடர் பாலியல் குற்றங்களால் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதாக காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
