Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜவுளிக்கடை உடைமாற்றும் அறையில் 18 வயது இளம்பெண் கழுத்தறுத்துக் கொலை!

ஜவுளிக்கடை உடைமாற்றும் அறையில் 18 வயது இளம்பெண் கழுத்தறுத்துக் கொலை!

டில்லி மோதி நகர் மெட்ரோ நிலையம் அருகே உள்ள ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வந்த இளம்பெண் ஷப்னம்(வயது 18). இவர் சனிக்கிழமை இரவு, பணி முடிந்து வீட்டிற்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது அவரது ஆண் நண்பர் சூரஜ் என்பவர் கடைக்கு வந்துள்ளார்.

பின்னர் இருவரும் கடையில் உள்ள உடைமாற்றும் அறைக்கு சென்று பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் சூரஜ் அங்கிருந்து தப்பி ஓடினார். இதைக் கண்டு கடையில் இருந்த ஊழியர்கள் உடைமாற்றும் அறைக்குள் சென்று பார்த்தபோது, ஷப்னம் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார்.

அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய சூரஜை சில மணி நேரங்களில் மடக்கிப் பிடித்து அதிரடியாக கைது செய்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சூரஜ் மற்றும் ஷப்னம் இருவரும் ஏற்கனவே பழகி வந்த நிலையில், அண்மையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்ததாகவும், இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஷப்னத்தை அவரது ஆண் நண்பர் சூரஜ் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

error: Content is protected !!