சென்னை புழல் மத்திய சிறைக்குள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களைக் கடத்த முயன்ற சிறை மருத்துவமனை செவிலிய உதவியாளர் கனகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். சிறையின் நுழைவு வாயிலில் நடைபெற்ற சோதனையின்போது, அவர் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த பார்சல் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 313 கிராம் கஞ்சா, 28 கிராம் உயர்ரக போதைப்பொருள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. விசாரணையில், அடையாளம் தெரியாத இரண்டு பெண்கள் பார்சலைக் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
புழல் சிறைக்குள் கஞ்சா கடத்த முயற்சி.. செவிலிய உதவியாளர் கைது
