திருச்சி ரெயில்வே இருப்புப் பாதை, காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா உத்தரவுப்படி
இன்று சிறப்பு ரோந்து அலுவலாக சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், காவலர்கள் கண்ணதாசன், ரெங்கபாஷ்யம், ராஜ்குமார் ஆகியோர் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சி வரை, ஹவுராவில் இருந்து திருச்சி வரை வந்த ரெயிலில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக வந்த தகவலின் பேரில் சோதனை செய்தனர் இதில் முன்புற பொதுப்பெட்டியில் கேட்பாராற்று கிடந்த இருக்கைக்கு கீழ் 1 சோல்டர் பேக்,( சிவப்பு நிறம்), மற்றும் பின்புற பொதுப் பெட்டியில் இருக்கைக்கு கீழ் 1 சாக்கு பை இருந்ததை சோதனை செய்ததில் 19, கி500 கிராமம் எடை உள்ள குட்கா பாக்கெட்டுகள் இருந்தன.இதை எடுத்து ரெயில்வே போலீசார் குட்காவை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
