Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் கஞ்சா விற்பனை… 2 பேர் கைது

திருச்சி எடமலைப்பட்டி புதூர் கொத்தமங்கலம் மில் காலனி மாரியம்மன் கோவில் அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்த ராம்ஜிநகர் கள்ளிக்குடி பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 27) என்பவர்ரை எடமலைப்பட்டி புதூர் போலீசார் பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். திருச்சி தீரன் நகர் தனியார் கல்லூரி அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த கள்ளிக்குடியை சேர்ந்த ஜெகநாதன் (வயது 33) என் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர் இதே போன்று திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த பாலசுப்பிரமணியன் என்பவரின் மனைவி ஹேமாவதி ( வயது 50) என்பவர்ரை போலீசார் வழக்கு பதிவு செய்து 40 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேற்கண்ட 3 வழக்குகளில் போலீசார் கிருஷ்ணகுமார், ஜெகநாதன் இருவரையும் ஜாமீனில் விடுதலை செய்தனர்.

error: Content is protected !!