Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை அருகே கார் மரத்தில் மோதி 2 பேர் பலி… 4 பேர் படுகாயம்

தஞ்சாவூர் அருகே அம்மன்பேட்டை தெற்குத் தெருவை சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் தளபதி (36), போலீசாரின் சரித்திர பதிவேடு குற்றவாளி. தளபதிக்கு பிறந்த நாள் என்பதால் நேற்று இரவு தளபதி மற்றும் அம்மன்பேட்டையை சேர்ந்த மோகன் என்பவரின் மகன் தமிழரசன் (27), நிதீஷ் (25), சுதர்சன் (21), நரேன் (18), அபினேஷ் (21) ஆகிய ஆறுபேரும் ஒரே காரில் திருவையாறுக்கு சென்றுள்ளனர். காரை தமிழரசன் ஓட்டிச் சென்றார். தளபதியின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக திருவையாறில் 6 பேரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

பின்னர் இன்று அதிகாலை 3 மணியளவில் திருவையாறில் இருந்து காரில் தளபதி உட்பட 6 பேரும் அம்மன்பேட்டைக்கு காரில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். இந்நிலையில் கண்டியூர் அருகே

சுற்று குளத்தான்கரை பகுதியில் கார் வேகமாக வந்த போது நிலைத்தடுமாறி சாலையோரத்தில் இருந்த பனைமரத்தில் மோதியுள்ளது.

இதில் காரில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்து அலறியுள்ளனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து காரில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இதில் தளபதி மற்றும் தமிழரசன் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். மற்ற 4 பேரும் 108 ஆம்புலன்ஸ் வாயிலாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து திருவையாறு போலீசார வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!