Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போதை மாத்திரை விற்பனை ….. கரூரில் 2 இளைஞர்கள் கைது…

கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலத்திற்கு அடியில் 2 இளைஞர்கள் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக வெங்கமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் அங்கு சென்ற போலீசார்  இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த வெங்கமேடு திருப்பூர் குமரன் தெருவை சார்ந்த சூர்யா (24), மாண்டா என்கின்ற மனோஜ் (24) ஆகியோரை பிடித்து சோதனை செய்ததில்  அவர்களிடம் போதை மாத்திரைகள்  இருந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து விசாரணை செய்ததில் திருப்பூரிலிருந்து வாங்கி வந்து விற்பனை செய்வதாக தெரிவித்தனர்.  மேலும்  அவர்களிடம் இருந்த 33 Tabentala dol tablets என்ற போதை மாத்திரைகளையும், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார், இளைஞர்கள் 2 பேரையும்  கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!