சீனாவின் ஹாங்சோ நகரில் 19வது ஆசிய விளையாட்டுப்போட்டி நடந்து வருகிறது. இதில் இன்று காலை நடந்த ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி மலேசியாவை 2-0 என்ற நேர் செட்டில் வென்று தங்கப்பதக்கம் வென்றது. இதன் மூலம் ஆசியப்போட்டியில் இன்று மதியம் வரையிலான நிலவரப்படி இந்தியா
இது தவிர 31 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 83 பதக்கங்களுடன் இந்தியா பட்டியலில் 4ம் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. இந்திய ஜோடியில் ஹரிந்தர் பால்சிங், தீபிகா பல்லிகல் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் தீபிகா பல்லிகல் தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் மனைவி ஆவார். இந்த ஜோடிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்பட 3 குழந்தைகள் உள்ளனர்.

