Skip to content
Home » 20ம் தேதி சனிப்பெயர்ச்சி… திருநள்ளாறில் சிறப்பு ஏற்பாடுகள்

20ம் தேதி சனிப்பெயர்ச்சி… திருநள்ளாறில் சிறப்பு ஏற்பாடுகள்

  • by Senthil

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில்,  தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது.   இக்கோவிலில், சனீஸ்வரர் தனி சன்னதிகொண்டு அருள்பாலிக்கிறார். இங்குள்ள  சனீஸ்வரரை தரிசனம் செய்வதற்காக, சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்  இந்தியா முழுவதும் இருந்து வருவார்கள்.

சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்கள்  வருவார்கள்.  இரண்டரை வருடத்திற்கு ஒருமுறை சனி பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம் பெயர்வார்.  இதை சனிப்பெயர்ச்சி விழாவாக கொண்டாடுகிறோம்.    ஆனால் கடந்த  2014ம் ஆண்டுக்கு பின்னர் 2017, 2020 என மூன்று  வருட இடைவெளியில் சனிபகவான் பெயர்ச்சியானார். அதன்படி இந்த வருடமும் 3 வருட இடைவெளியில் வருகிற 20.12.23 அன்று மாலை 5.20 மணிக்கு  சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது.

அப்போது மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குள் சனிபகவான் பிரவேசிக்கிறார்.   சனிபகவான்  பெயர்ச்சியாகும்போது

தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் குறித்து காரைக்கால்  மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன்,  நிருபர்களிடம் கூறியதாவது:சனிப்பெயர்ச்சி விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், பக்தர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை செய்துவருகிறோம். விழாவில் ஆன்லைன் டிக்கெட் வருகிற 15, 16ல் ஒப்பனில் இருக்கும். அந்த ஆன்லைன் டிக்கெட்டில், பார்ட்டி புகைப்படம் மற்றும் கியூ ஆர் கோடும் வருவது போல் செய்துள்ளோம். வழி தவறினாலும், கியூ ஆர் கோடு மூலம் உரிய இடத்திற்கு சென்று சேரலாம்.

அதேபோல் ரூ.300, ரூ.600, ரூ.1000 டிக்கெட் வழங்கப்படும். . ஆன்லைன் டிக்கெட் கிடைக்காதவர்கள் கோவிலைச்சுற்றியுள 15 இடங்களில் உள்ள டிக்கெட் மையங்களில் அனைத்து டிக்கெட்டையும் பெற்றுக்கொள்ளலாம். வாகன நிறுத்துமிடத்திலிருந்து

பக்தர்களை இந்த முறை இலவச பஸ் மூலம் கோவிலுக்கு அழைத்து வர ஏற்பாடுச் செய்துள்ளோம். அதற்காக 26 பஸ்கள் விடப்படுகிறது. மேலும், பக்தர்களின் வசதிகருதி,  120க்கும் மேற்பட்ட நகரும் கழிவறை வசதிகளும், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள 212 கழிவறை வசதிகளும் உள்ளது.

. பக்தர்கள் வரிசையாக செல்லும் இடத்தில் தண்ணீர், பிஸ்கட், உணவு வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். இது தவிர பொதுமக்கள் வழங்கும் அன்னதானம் சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க உரிய நடவடிக்கை எடுத்துள்ளோம்.  அன்னதானம் செய்ய விரும்புவோர் வரும் 15ம் தேதிக்குள்  தொடர்பு கொள்ளலாம். 30 கூடுதல் ஜெனரேட்டர் வசதி ஏற்பாடுச் செய்துள்ளோம். அதேபோல், யாசகர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் மறு சுழற்சி செய்யாமல் இருக்க போலீசார் ஆய்வு செய்வார்கள். முக்கியமாக, சனிப்பெயர்ச்சி அன்று மாலை(20ந் தேதி) 6 மணி முதல் 21ந் தேதி மாலை 6 மணிவரை கோவில் நடை மூடப்படாது. விடிய, விடிய தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்றையதினம் விவிஐபிகள் வந்தாலும், பக்தர்கள் தரிசனம் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் ஏற்பாடு செய்துள்ளோம். திருநள்ளாறு மட்டுமின்றி, காரைக்கால் நகர் பகுதி வரை துப்புரவு முகாம்கள் நடைபெற்று வருகிறது. குற்ற சம்பவங்கள் நடைபெறமால் இருக்க கோவில் மற்றும் கோவிலை சுற்றி 162 சிசி கேமராக்கள், மெகா எல்.இ.டி டிவி வசதிகளும் அமைத்துள்ளோம். புதுச்சேரியிலிருந்து 1500 போலீசாரும், உள்ளூர் போலீசார் சுமார் 300 பேரும், இது தவிர அப்தமித்ரா, தன்னார்வலரக்ளும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இருப்பார்கள். பக்தர்களின் அவசர மருத்துவ வசதிக்காக, ஆம்புலன்ஸ், விநாயாக மிஷன் மற்றும் மீனாட்சி மிஷன் தனியார் மருத்துவமனை குழு ஏற்பாடு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது கோவில்  நிர்வாக அதிகாரி அருணகிரிநாதனும் உடனிருந்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!