Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

26ம் தேதி ”ராயன்” ரிலீஸ்… நடிகர் தனுஷ் குலதெய்வ கோவிலில் சாமிதரிசனம்…

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துரங்காபுரம் கிராமத்தில் நடிகர் தனுஷின் குலதெய்வ கோவிலான கஸ்தூரி அம்மாள் மங்கம்மாள் கோவில் உள்ளது. இந்தக் கோவில் புனரமைப்பு பணிக்கு நடிகர் தனுஷின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரிராஜா பெரிய நிதி உதவி கொடுத்து உள்ளார். இந்தக் கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது. இதற்கிடையே நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் தனது 50வது திரைப்படமான ராயன் வரும் 26ம் தேதி உலகம் எங்கும் ரிலீஸ் ஆகிறது.

இந்தத் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் அவருடைய அண்ணன் செல்வராகவன், நடிகர் எஸ் ஜே சூர்யா பிரகாஷ்ராஜ்

உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தனது 50வது திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு நடிகர் தனுஷ், அவருடைய அண்ணன் செல்வராகவன், இவர்களின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரிராஜா மற்றும் தனுஷின் மகன்கள் குடும்பத்தினர்கள் அவரது குலதெய்வ கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷின் தாயார் விஜயலட்சுமியின் குலதெய்வ கோவில் போடியில் உள்ளது, அந்த கோவிலுக்கும் குடும்பத்துடன் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!