அரியலூர் நகரில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான அருள்மிகு கோதண்ட ராமசாமி கோவிலில் 2 ம் ஆண்டு பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு கருட கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள அருள்மிகு கோதண்ட ராமசாமி ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோவிலில் ஆகும். தமிழ்நாட்டில் தசாவதார சிற்பங்கள் ஆறடி உயரத்தில் உள்ள ஒரே திருக்கோவிலாகவும், ஸ்ரீதேவி பூதேவி சமேத கோதண்ட ராமர் ஆகவும் பக்தர்களுக்குஅருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் 83 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தேர் இந்து சமய அறநிலைத்துறை மற்றும் ஆன்மீக பக்தர்களால் புனரமைக்கப்பட்டு,

கடந்த ஆண்டு முதல் முறையாக தேரோட்டம் நடைபெற்றது. இரண்டாம் ஆண்டு பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவையொட்டி இன்று காலை

கொடியேற்றம் நடைபெற்றது. இதனையொட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத கோதண்ட ராமருக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு புத்தாடை அணிவிக்கப்பட்டு மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. இதுபோன்று உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி

சமேத சீனிவாச பெருமாளும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எழுந்தருளினார். பின்னர் அருள்மிகு கோதண்ட ராமசாமி கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில்

கருடன் கொடி ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் அன்ன வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.
