Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

9ம் வகுப்பு மாணவிகள் 3 பேர் சாணிப் பவுடரை குடித்ததால் பரபரப்பு

கோவை, பொள்ளாச்சி அடுத்த கஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் . இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவிகள் 3 பேரை ஆசிரியர்கள் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மாணவிகள் 3 பேரும் சாணி பவுடர் கரைசலை குடித்து உள்ளனர். சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளி மயக்க முற்றுள்ளனர். பதறிய ஆசிரியர்கள்

கஞ்சம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு வந்த ஆசிரியர்களிடம் மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  மாணவிகள் ஏதாவது தவறு செய்தால் எங்களுக்கு தகவல் அளித்தால் நாங்கள் அவர்களை கண்டிப்போம் ஆனால் நீங்கள் திட்டினீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.

error: Content is protected !!