Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது- திருச்சி க்ரைம்

போதை மாத்திரைகள் விற்ற 3 பேர் கைது.. ஊசிகள் பறிமுதல்

திருச்சி உக்கடையில் உள்ள ஒரு காலனி அருகே போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக அரியமங்கலம் போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு போதை மாத்திரைகள் விற்று கொண்டிருந்த அரியமங்கலம் அண்ணா நகரைச் சேர்ந்த மதன் என்ற குட்செட் மதன் வயது 43 என்பவரை அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர். இதேபோல் பாலக்கரை பெல்ஸ் மைதானம் அருகே போதை மாத்திரைகள் விற்றதாக அதே பகுதியைச் சேர்ந்த விமல் ராஜ் 25 ஹேமா துல்லா 18 ஆகியோர்களை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 68 போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் வாட்டர் பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.

புகையிலைப் பொருட்கள் விற்பனை -3 பேர் கைது..

திருச்சி விமான நிலையம் பகுதியில் உள்ள ஒரு டீ கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக விமான நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு டீக்கடையில் வைத்து புகையிலை பொருட்கள் விற்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த முகமது ஜென்கிஸ் வயது 45 என்பவரை போலீசார் கைது செய்தனர். அதேபோல்திருச்சி தூக்கு மேடை தெரு ஜங்ஷன் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்றுகொண்டதாக தில்லைநகர் மற்றும் தென்னூர் பகுதியைச் சேர்ந்த மீனா 43 விஜயா 50 ஆகிய இரண்டு பேரை தில்லைநகர் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 1 3/4 கிலோ புகையிலைபொருட்கள் செய்யப்பட்டது.

மது வாங்குவதில் தகராறு; வாலிபர் மீது தாக்குதல்4 பேர் கொண்ட கும்பல் கைது

திருச்சி கே.கே. நகர் பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வன் வயது 26. இவர் நேற்று முன்தினம் இரவு கே.கே.நகர் எல்.ஐ.சி. காலனி பகுதியில் உள்ள மதுபானக் கடையில் மது வாங்க சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பலுக்கும், இவருக்கும் இடையே மது வாங்குவதில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, கையால் தாக்கி உள்ளனர். இதுகுறித்து அவர் கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கே.சாத்தனூர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து 37, நாகமங்கலத்தை சேர்ந்த மோகன்ராஜ் 26, புதுக்கோட்டையை சேர்ந்த கிஷோர் 22, கே.சாத்தனூரை சேர்ந்த ராதா கிருஷ்ணன் 22 ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக கே.சாத்தனூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரை தேடி வருகின்றனர்.

வியாபாரியை மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது

திருச்சி கருமண்டபம் ஸ்ரீராம் நகரச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி வயது 25. இவர் கண்டோன்மென்ட் பகுதியில் ஒரு சிற்றுண்டி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவ கடையில் இருந்த போதுகருமண்டபம் சமத்துவ நகரைச் சேர்ந்த ரவுடியான ஹேமஸ்வரன் வயது 23 அங்கு வந்து தங்கபாண்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 500 கேட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!