Skip to content
Home » துவரங்குறிச்சி அருகே கார் கவிழ்ந்து 3 பேர் பலி…

துவரங்குறிச்சி அருகே கார் கவிழ்ந்து 3 பேர் பலி…

  • by Senthil

திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் கோபி ( 57). இவரது மனைவி
விஜயலட்சுமி(51). இவர் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஓவர் சியராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது சகோதரர் கண்ணன் (47). இவர்கள் 3 பேரும் ஒரு காரில் சிவகாசியில் நடைபெறும். உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக இன்று காலை புறப்பட்டு சென்றனர். திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சியை அடுத்த யாகபுரம் அருகே கார் சென்றபோது திடீரென கார் கட்டுபாட்டை இழந்தது. எதிர்பாராத விதமாக கார் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கோபி, கண்ணன் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில்
ஈடுபட்டனர். காயம் அடைந்த கோபி, கண்ணன் ஆகிய 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
துவரங்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தனர். அப்போது கண்ணன் வரும் வழியிலேயே உயிரிழந்தது  தெரியவந்தது. கோபிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதையடுத்து விஜயலட்சுமி, கண்ணன் ஆகிய 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்து அந்த பகுதியில் பெரும்
சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!