Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தனியாக தவித்த 3 வயது குழந்தை!”மீட்டு தாயிடம் சேர்த்த போலீஸ்!

தனியாக தவித்த 3 வயது குழந்தை!”மீட்டு தாயிடம் சேர்த்த போலீஸ்!

பெரம்பூர்: உறவினர் வீட்டில் இருந்து வழி தவறிச் சென்ற 3 வயது குழந்தையை போலீசார் பத்திரமாக மீட்டு தாயாரிடம் ஒப்படைத்தனர்.ரெட்ஹில்ஸ் அருகே சோழவரம் பகுதியை சேர்ந்தவர் மோகனப்பிரியா(35), கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து தாயார் சாந்தியுடன் வசித்து வருகிறார். இவருக்கு நிஷா, ஜீவதர்ஷினி என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மோகனப்பிரியாவின் தாயார் சாந்தி திருவிக நகர் திருவேங்கடம் தெருவில் உள்ள தனது உறவினரை பார்க்க தனது 3 வயது பேத்தி ஜீவதர்ஷினியுடன் சென்றவர் இரவு அங்கு தங்கினார்.

தொடர்ந்து, நேற்று காலை 6 மணியளவில் குழந்தை ஜீவதர்ஷினி வீட்டின் அருகே விளையாடியபடி ரோட்டிற்கு வந்து தனியாக நின்றுள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் குழந்தையிடம் விசாரித்துள்ளனர். ஆனால், குழந்தை சரியான தகவல் தெரிவிக்கவில்லை. இதையடுத்து பொதுமக்கள் திருவிக நகர் போலீஸ் ஸ்டேசனிற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டனர்.மேலும் அப்பகுதி மக்களிடம் குழந்தை குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

குழந்தையின் விவரம் தெரியாத நிலையில், போலீசார் குழந்தையை காவல் நிலையம் அழைத்து சென்று உணவு வழங்கினர். இதனிடையே, குழந்தை காணவில்லை என்று கூறி குழந்தையின் பாட்டி சாந்தி மற்றும் உறவினர்கள் பல இடங்களிலும் தேடி அலைந்தனர். அப்போது, பொதுமக்கள் சிலர் குழந்தை திருவிக நகர் போலீஸ் ஸ்டேசனில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தாய் மோகனப்பிரியா, பாட்டி சாந்தி மற்றும் உறவினர்கள் திருவிக நகர் போலீஸ் ஸ்டேசனிற்கு சென்றனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு குழந்தையை மோகனப்பிரியாவிடம் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!