Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் 2026-ல் 313 வழக்குகள் பதிவு – 121 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!- ஒருவர் கைது

18 டன் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் ஒருவர் கள்ளச்சந்தை தடுப்புச் சட்டத்தில் கைது!

திருச்சி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையினர் 2026ஆம் ஆண்டில் இதுவரை 313 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இதில் 121 டன் ரேஷன் அரிசி, அனுமதியின்றி பயன்படுத்தப்பட்ட 240 வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கப்படும் 14,175 கிலோ யூரியா உரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 3 பேர் மீது கள்ளச்சந்தை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் மதுரையில் இருந்து திருச்சிக்கு 18 டன் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில், மதுரை மாவட்டம் கீழத்தோப்பைச் சேர்ந்த கண்ணன் மகன் பாலகிருஷ்ணன் என்பவர் மீது கள்ளச்சந்தை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை மண்டல காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ் பரிந்துரையின்படியும், துணைக் காவல் கண்காணிப்பாளர் வின்சென்ட் மேற்பார்வையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, பாலகிருஷ்ணன் இன்று கள்ளச்சந்தை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!
Secret Link