Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வெறிநாய்கள் கடித்து -40 நாட்டுக்கோழிள் பலி.. கரூர் அருகே பரிதாபம்

வெறிநாய்கள் கடித்து குதறியதில் -40 நாட்டுக்கோழிள் பலி.. கரூர் அருகே பரிதாபம்

கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சி அமராவதி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். பட்டதாரியான இவர் வேலை கிடைக்காததால் தமிழ்நாடு அரசு நாட்டுக்கோழி வளர்ப்பு முறையினை முறையாக பயின்று 10 ஆண்டுகளாக தனது வீட்டின் அருகே நாட்டுக்கோழி பண்ணை அமைத்து வளர்த்து விற்பனை செய்து வருகிறார்.

புலியூர் பேரூராட்சி அமராவதி நகர் பகுதிகளில் தெரு நாய்கள் மற்றும் வெறி நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளதால் அவ்வப்போது கோழிகளை கடித்து வருகிறது.

வெறி நாய்களின் தொல்லை அதிகரித்ததால் இது குறித்து கடந்த மாதம் புலியூர் பேரூராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் புகார் மனு அளித்துள்ளார்.

ஆனால் அந்தப் புகார் மனு மீது பேரூராட்சி அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மீண்டும் நாய்கள் கோழிகளை இரவு நேரங்களில் கடித்து கவ்வி சென்ற வண்ணம் உள்ளதால் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு முதல்வர் தனி பிரிவிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் குறித்து புலியூர் பேரூராட்சி அதிகாரிகளுக்கு சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தெரிவித்த போது அப்பகுதி உள்ள நாய்களைப் பிடித்து குடும்ப கட்டுப்பாடு செய்து விட்டதாக கூறியுள்ளனர்.

ஆனால் வெறி நாய்களை கட்டுப்படுத்துவதற்கு அவர்கள் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் நேற்று இரவு அந்தப் பகுதியில் திரியும் நாய்கள் ஒன்று சேர்ந்து நாட்டுக்கோழி பண்ணையில் இருந்த 40 நாட்டுக்கோழிகளை கடித்து குதறி வீசி சென்றுள்ளன.

வேலை கிடைக்காததால் தனது குடும்பத்தினர் நகைகளை அடமானம் வைத்து சுய தொழில் செய்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்று நினைத்த இளைஞர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

கடந்த ஒரு மாதங்களாக வெறி நாய்களின் தொல்லைகளை கட்டுப்படுத்த புகார் அளித்தும் பேரூராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்ததே இத்தகைய இழப்பிற்கு காரணம் . எனவே மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு தனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!