Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் விசித்ரா மேக் ஓவர் ஆர்டிஸ்டரி சார்பில் 4ம் ஆண்டு ஃபேஷன் ஷோ

!

விசித்ரா மேக் ஓவர் ஆர்டிஸ்டரி சார்பில், திருச்சி மொராய் சிட்டியில் 4-ஆம் ஆண்டு மாநில அளவிலான மிஸ், மிஸ்டர் & மிஸஸ் ஜூனியர் அழகுப் போட்டி (Pageant Show) மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் திருமணமானவர்கள் உட்பட ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, தமிழர்களின் பாரம்பரிய உடையான சேலை அணிந்து அழகிகள் ஒய்யார நடைபோட்டு பார்வையாளர்களைக்

கவர்ந்தனர்.
இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவோடு நின்றுவிடாமல், தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்படுவதோடு, சினிமா வாய்ப்புகளும் ஏற்படுத்தித்

தரப்படுகின்றன என விழாக்குழுவினர் தெரிவித்தனர்.
விசித்ரா மேக் ஓவர் நிறுவனர் விசித்ரா ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில், சினிமா நட்சத்திரங்கள் சசி லயா மற்றும் தியா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தனர். இந்நிகழ்ச்சியில் திரளான பொதுமக்களும், துறை சார்ந்த பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

error: Content is protected !!