தஞ்சை தனியார் துவக்கப்பள்ளியில் பயிலும் 4ம் வகுப்பு மாணவ, மாணவிகள் துணி பை வடிவில் அமர்ந்து நெகிழிக்கு எதிராக நடத்திய விழிப்புணர்வு நிகழ்வு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
தஞ்சையில் உள்ள ஏஞ்சல் ஆன் த எர்த் என்ற தனியார் துவக்கப்பள்ளியில் நெகிழிக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது. இதில் 4ம் வகுப்பு பயிலும் 47 மாணவ, மாணவிகள் துணி பை

வடிவில் அமர்ந்து நிலத்தை காப்போம் விவசாயத்தை கெடுக்கும் நெகிழி வேண்டாம் மண்ணை கெடுக்கும் நெகிழி மனித குலத்தின் எதிரி நெகிழி பையை எறிவோம் துணி பையை எடுப்போம் என்று முழக்கமிட்டு நடத்திய விழிப்புணர்வு நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
