Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கஞ்சா, போதை மாத்திரை விற்பனை… திருச்சியில் 5பேர் கைது

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

திருச்சி மாநகரில் கஞ்சா போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது இதை எடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் எடமலைப்பட்டி புதூர், செசன்ஸ் கோர்ட், பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது கஞ்சா மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இதேபோல் திருச்சி பாலக்கரை பகுதியில் போதை மாத்திரைகள் விற்றதாக பிரபு என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.மதுவிலக்கு போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் ராம்ஜி நகரில் கஞ்சா விற்ற பிரகாஷ் என்பவரது மனைவி சுலோச்சனா (வயது 72) என்ற மூதாட்டியை கைது செய்தனர்.இதேபோல் திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் மதுவிலக்கு போலீசார் சந்தேகத்துக்கிடமாக வந்த முதியவரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர் மது பாட்டில்கள் கடத்தி விற்க முயன்றது தெரியவந்தது.போலீசார் அவரை கைது செய்து 217 புதுப்படில்களை பறிமுதல் செய்தனர்.பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

error: Content is protected !!