தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றி வரும் 5 அதிகாரிகள் செங்கல்பட்டு, சேலம் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றி வரும் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகங்கள், மாநகராட்சிகள் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகள் புதிய பணியிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழரசு அலுவலகத்தில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வரும் எஸ்.ஆர்.எஸ்.ஸ்ரீந்தர், மாற்றுப் பணி அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றி வரும் கி.மோகன்ராஜ், கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றி வரும் நி.சையது முஹமது, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.
மேலும், சேலம் மாநகராட்சியில் துணை இயக்குநர் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றி வரும் சிங்காரம், கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் துணை இயக்குநர் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றி வரும் க.சேகர், சேலம் மாநகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, தமிழரசு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சிகள் மற்றும் அரசு போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றில் பணியாற்றும் மொத்தம் 5 அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
