Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் லாட்டரி விற்ற 5 பேர் கைது…


திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஜீயபுரம், கடியாக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே லாட்டரி விற்ற பெருகமணியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (63) என்பவரை ஜீயபுரம் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு மொபைல் போன், பைக் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பெட்டவாய்த்தலை, பெருகமணி பேருந்து நிறுத்தம் அருகே லாட்டரி எண்களை எழுதி விற்பனை செய்த காந்தி நகரைச் சேர்ந்த செல்வம் (68) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மண்ணச்சநல்லூர், திருவெள்ளறை பஜார் பகுதியில் லாட்டரி விற்ற ராமையன் (78) மற்றும் வாசுதேவன் (67) ஆகிய இருவரை மண்ணச்சநல்லூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.5,470 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும்,தொட்டியம் பேருந்து நிலையம் அருகே லாட்டரி விற்ற ராஜகோபால் (93) என்பவரை போலீசார் கைது செய்து 8 லாட்டரி டோக்கன்களை பறிமுதல் செய்தனர்.

தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற 2 பேர் கைது

திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வளநாடு அருகே போலீசார் நடத்திய சோதனையில், ஹான்ஸ் புகையிலை பொட்டலங்களை விற்ற ரெங்கசாமி (77) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 10 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல், துறையூர் பேருந்து நிலையம் அருகே புகையிலை விற்ற சரவணன் (23) என்பவரை துறையூர் போலீசார் கைது செய்து 15 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!