உத்தரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ரபுபுராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மகேஷ் (37), மனைவி லலிதா (35) மற்றும் மூன்று குழந்தைகள் லட்டு (11), சக்ஷத் (3), மிஷ்டி (7) ஆகியோர் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர். நேற்றிரவு நூடுல்ஸ் சாப்பிட்டதாகக் கூறப்படும் நிலையில், உணவு நஞ்சானதால் மரணம் நிகழ்ந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், உணவுப் பாதுகாப்புத் துறையின் முதற்கட்ட ஆய்வில் நச்சுத்தன்மைக்கான ஆதாரங்கள் ஏதும் சிக்கவில்லை. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உண்மை தெரியவரும்
நூடுல்ஸ் சாப்பிட்டு உறங்கிய 5 பேர் பலி
