Skip to content
Home » தண்ணீர் லாரி ஏற்றி தந்தை கொலை.. மகன் கைது..

தண்ணீர் லாரி ஏற்றி தந்தை கொலை.. மகன் கைது..

  • by Senthil

கரூர் மாவட்டம், வெள்ளி யணை அருகே உள்ள கொறவப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் (57). கதிரடிக்கும் எந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார். நேற்று அதிகாலை இவர் டூவீலரில் தனது தோட்டத்திலிருந்து வீட்டிற்கு செனறு கொண்டிருந்தார். கொறவப்பட்டி-தம்மநாயக்கன்பட்டி பிரிவு சாலையில் வந்த போது அப்போது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தங்கராஜ் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வெள்ளியணை போலீசார் விபத்து என கருதி விசாரணை நடத்தி வந்தனர். தகவல் அறிந்து தங்கராஜின் மகன் மோகனசுந்தரம்(30), தனது மனைவியுடன் சென்று தந்தையின் உடலை பெற்றுக் கொண்டு கதறி அழுதார். இந்நிலையில் தங்கராஜின் உறவினர்கள், சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் விபத்து நடந்த பகுதியில் கைபற்றப்பட்ட நம்பர் பிளேட்டை வைத்து விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். அப்போது அந்த நம்பர் பிளேட் டேங்கர் லாரியினுடையது என்பது தெரிய வந்தது. அந்த டேங்கர் லாரி யாருடையது என்று போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அந்த நெம்பர் பிளேட், இறந்த தங்கராஜின் மகன் மோகன சுந்தரத்துடையது என்பது தெரிய வந்தது. தந்தை உடல் முன்பு கதறி அழுது நாடகமாடி கொண்டிருந்த மோகன சுந்தரத்தை , தனியாக அழைத்து சென்று போலீசார் தங்களது ‘ஸ்டைலில்’ விசாரித்துள்ளனர். அதில் தங்கராஜை கொன்றதை ஒப்புக்ககொண்டு மோகன சுந்தரம் கூறும் போது, எனது தாயார் அதாவது தங்கராஜின் மனைவி ஜெயலட்சுமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தங்கராஜ் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தகாத உறவு வைத்து இருந்தார். எனக்கு 30 லட்சம் கடன் உள்ளது. இதனை அடைப்பதற்காக சொத்தை எழுதி தர கேட்டேன். ஆனால் அவர் எழுதி தர மாட்டேன் என கூறினார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும். ஒரு கட்டத்தில் சொத்து எங்கே தன் கையை விட்டு, தந்தையின் கள்ளக்காதலிக்கு போய் விடுமோ? என்ற பயம் ஏற்பட்டது. இதனால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். இதனை தனது மாமா உறவு முறையான மகாசாமி(45) என்பவரிடம் கூறினேன். அதன்படி நேற்று அதிகாலை 5 மணி அளவில் கொறவப்பட்டி-தம்மநாய க்கன்பட்டி பிரிவு சாலையில் மோட்டார் சைக்கிளில் எதிரே வந்து கொண்டிருந்த தந்தை மீது டேங்கர் லாரியை மோத விட்டு கொன்றேன் இவ்வாறு கூறியுள்ளார். அவரின் வாக்கு மூலத்தை தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்து, மோகனசு ந்தரம், மகாசாமி இருவரையும் வெள்ளியணை போலீசார் கைது செய்தனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!