Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி ரயில்வே ஸ்டேசனில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்..

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான 6 கிலோ கஞ்சா பறிமுதல்

திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில், தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் அருள் ஜோதி உத்தரவின் பேரில், ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் அஜித்குமார் தலைமையில், சட்டவிரோதமான போதை பொருட்கள் கடத்தலுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது. அப்போது சென்னை – குருவாயூர் விரைவு ரயிலில் சோதனை செய்தபோது, அதில் கேட்பாரற்று ஒரு டிராவல் பேக் கிடந்துள்ளது. அதனை எடுத்து பிரித்து பார்த்தபோது அதில் ரூ.3 லட்சம் மதிப்பிலான 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படையினர், கஞ்சா கடத்தி வந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!