Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வாலிபரை தாக்கி செல்போன், மோட்டார் சைக்கிள் பறிப்பு…

வாலிபரை தாக்கி செல்போன், மோட்டார் சைக்கிள் பறிப்பு…

ரவுடி உள்பட 3 பேர் மீது வழக்கு

திருச்சி புத்தூர் போலீஸ் ரங்கசாமி தெரு பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 38) இவர் தனது மோட்டார் சைக்கிளில் உறையூர் புத்தூர் ரோடு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு டிபன் வாங்க சென்றார் அப்போது உறையூர் காந்திபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் ( 26 ) அவரது நண்பர் ரிஷி ,
17 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரும் அவரை தாக்கி செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து விட்டு தப்பி சென்றனர் மேலும் கூகுள் பே மூலம் ரூபாய் 350 பணத்தையும் கத்தி முனையில் பறித்துள்ளனர் இது குறித்து ஸ்டாலின் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேற்கண்ட மூன்று பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து
விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய மார்க்கெட் கட்டுமான பொருட்கள் திருட்டு

வாலிபர் கைது ;மேலும் ஒருவருக்கு வலைவீச்சு

திருச்சி பஞ்சப்பூரில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய மார்க்கெட் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன இதில் திட்ட மேலாளராக புதுக்கோட்டை மாஞ்சான் விடுதியைச் சேர்ந்த அருண்குமார் (வயது 33) என்பவர் பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் அங்கு கட்டுமான பணிக்காக இறக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ எடை கொண்ட இரும்பு ராடுகளை வாசு மற்றும் கீழப்பஞ்சபூர் கிழக்குத் தெரு காலனி பகுதியைச் சேர்ந்த மணிவேல் (வயது 29) ஆகிய இரண்டு பேர் திருடி சென்று விட்டனர் பின்னர் இது பற்றி அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மணிவேலை எடமலைப்பட்டிபுதூர் போலீசார் கைது செய்தனர் மேலும் வாசுவை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!