Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெண்ணிடம் செல்போன் பறிப்பு…. திருச்சி கிரைம்…

கே.கே. நகர் பகுதியில்

பெண்ணிடம் செல்போன் பறிப்பு

திருச்சியில் உள்ள தனியார் செராமிக்ஸ் கடையில் வேலை செய்து வரும் பெண் ஒருவர், கடந்த 9 தேதி அன்று இரவு மணியளவில் டிவிஎஸ் டோல்கேட் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு தனது செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
​அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென அவர் வைத்திருந்த செல்போனைப் பறித்துச் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து கே.கே. நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்திய போது
இச்சம்பவத்தில் தொடர்புடைய பாலக்கரை கூனி பஜாரைச் சேர்ந்த சைமன் கிஷோர் (வயது25) மற்றும் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த அகஸ்டின் கேவின் (வயது24) ஆகிய இருவரையும்போலீசார் கைது செய்துள்ளனர்.

​ திருவரங்கம் பகுதியில் முன்விரோதம் காரணமாக

வாலிபர் மீது மதுப்பாட்டிலால் தாக்குதல்
​

ஒருவர் கைது

திருச்சி அக் 11-

திருச்சி கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்த ராஜா (வயது 39) என்பவர் அப்பகுதியில் நின்றுகொண்டிருந்தார்.
அப்போது மதுபோதையில் அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (வயது43) என்பவர், ராஜாவை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, மதுபாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த
​முன்விரோதம் காரணமாக கடந்த 8ந்தேதி ராஜாவின் சகோதரி மகன் அஜய் என்பவருக்கும், ராஜேஷின் மகன் ஜீவதர்சனுக்கும் இடையே ஏற்பட்ட சிறு தகராறு காரணமாகவே தாக்கி கொண்டனர்.
இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த ராஜா, தொண்டை பகுதியில் காயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார்
வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ராஜேஷ் சை கைது செய்தனர்.

error: Content is protected !!