வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
திருச்சி கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (வயது 19). இவரின் தந்தை கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்த நிலையில் தனது தாயுடன் தனியாக வசித்து வந்தார். பெயிண்டிங் வேலை செய்து வந்த இவருக்கு கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூதாட்டியிடம்
தங்கச் சங்கிலி பறிப்பு
திருச்சி உறையூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நர்கீஸ் பானு (வயது 48). இவர் தனது தாய் அபி நிஷாவுடன் அப்பாகுதியில் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் கடந்த ஐந்து வருடமாக வீட்டு வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம் போல் காலை வேலைக்கு சென்ற நர்கீஸ் பானு வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது தனது தாய் அணிந்திருந்த தங்கச் சங்கிலி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த அவர் உறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போன் திருடியவர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் நடுவூர் செல்லாங்கரை பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் வயது 53. கொத்தனாரான இவர் அரியமங்கலம் பகுதியில் புதிய கட்டிடம் கட்டும் பணியை முடித்துவிட்டு இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருவெறும்பூர் பகுதி சேர்ந்த ராமு 22, காட்டூர் பகுதியை சேர்ந்த சையது ஆகிய இருவரும் சாமிநாதனின் செல்போனை திருடி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ராமுவை கைது செய்தனர். மேலும் இந்த திட்டத்தில் ஈடுபட்ட சையது போலீசார் தேடி வருகின்றனர்.
வாலிபர்களை வழிமறித்து தாக்கிய மர்ம நபர்கள்
திருச்சி மாவட்டம் கம்பரசம் பேட்டையை சேர்ந்தவர்கள் நவீன் பிரசாத் வயது 25 மற்றும் சுதர்சன் 30. இவர்கள் இருவரும் திருச்சி பழைய கரூர் ரோடு பகுதியில் உள்ள ஒரு பேக்கரிகள் மாஸ்டராக வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று இருவரும் வேலை முடிந்த இரவு தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இவர்கள் கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள பறவைகள் பூங்கா அருகே வந்தபோது அங்கு வந்த அடையாளம் தெரியாத 5 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை வழிமறித்து நவீன் பிரசாத் மற்றும் சுதர்சனை தகாத வார்த்தைகளால் திட்டி முள் கம்பு மற்றும் பீர் பாட்டிலால் தாக்கி உள்ளனர். பின்னர் அவர்களிடமிருந்து இரண்டு செல்போன்கள் பணம் ரூ.1300 ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவைகளை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பெயரில் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
