விழுப்புரத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில்,
ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கேட்பாரற்று கிடந்த 27 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது
திருச்சி இருப்புப் பாதை காவல் மாவட்ட கண்காணிப்பாளர்
ஆதார் பச்சேரா உத்தரவின் பேரிலும், திருச்சி இருப்புப் பாதை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி மேற்பார்வையிலும் ரெயில்களில் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கான தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, நேற்றிரவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலையில்
ரெயில்வே போலீசார் சிறப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
இவர்கள் விழுப்புரத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த ஹவுரா – திருச்சி விரைவு இரயிலில்
தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ரெயிலின் பின்புறம் உள்ள பொதுப் பெட்டியில் வெவ்வேறு இருக்கைகளுக்கு அடியில் கேட்பாரற்று இரண்டு சோல்டர் பைகள் கிடப்பது கண்டறியப்பட்டது.
சந்தேகத்தின் பேரில் அந்தப் பைகளைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.
மொத்தம் 27 கிலோ எடை கொண்ட இந்த குட்கா மூட்டைகளை காவலர்கள் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து இருப்புப் பாதை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை இரயிலில் கடத்தி வந்த நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
