கரூர் மாவட்ட, ஆட்சியர் அலுவலகம் முன்பு தங்கள் இடத்தை மோசடியாக அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோபால் என்பவர் தனது குடும்பத்துடன் மனு கொடுக்க வந்தார்.
அப்போது ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் கோபால் நுழைவு வாயில் முன்பு தான் மறைந்து வைத்திருந்த

மண்ணெண்ய்யை ஊற்றி தீ குளிக்க முயன்றார் அங்கு இருந்த போலீசார் கோபலை மீட்டு விசாரணைக்கு அழைத்து சென்றார்.
இது குறித்து கோபால் கூறியதாவது:
கடவூர் வட்டம் தேவனூர் ரெட்டியப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவருக்கு என்னுடன் சேர்ந்து 3 மகன்கள் உள்ளோம். எங்கள் மனைவி குழந்தைகளுடன் எங்கள் தந்தை பெருமாளுக்கு சொந்தமான இடத்தில் வசித்து வருகிறோம். நாங்கள் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர்கள்.
விவசாய கூலி வேலைகள் செய்து கொண்டும். சொந்த நிலத்தில் விவசாயம் செய்தும் ஜீவனம் செய்து வாழ்த்து வருகிறோம், எங்களது அம்மா வெள்ளத்தாயின் இருதய நோயை குணப்படுத்தும் நோக்கில் மசாலூர் கிராமம் ரவிச்சந்திரனிடம் எங்கள் நிலத்தையும், அதில் அரசாங்கம் கட்டிக் கொடுத்த தொகுப்பு வீடுகளையும் அடமானமாக ஈடு காட்டி ரூ.14 லட்சம் கடன் பெற்றோம். அடமான கடனாக சொத்தினை எழுதிகொண்டார். பிறகு நாங்கள் அடமான கடனை உரிய வட்டியுடன் திருப்பி கொடுத்து தீர்வு செய்வதற்கு ரவிச்சந்திரனை அழைத்ததற்கு சாக்கு போக்குகள் சொல்லி வர மறுத்துவிட்டார். ஆனால் மேற்படி ரவிச்சந்திரன் நாங்கள் ஈட்டு கடனுக்காக எழுதிக் கொடுத்த எங்கள் நிலத்தினை அவரது நண்பரான குளக்காரன்பட்டி, மாவத்தூர் கிராமம் கன்னுசாமிக்கு 19.03.2021-ல் கிரையம் எழுதி வைத்துவிட்டார். நாங்கள் ரவிச்சந்திரன் மற்றும் கன்னுசாமியை நேரில் அனுகி முறையிட்டதற்கு “அடமான கடனை வட்டியுடன் திருப்பி கொடுத்தால் எப்பொழுது வேண்டுமானாலும் நிலத்தை எழுதி கொடுத்து விடுகிறோம்” என்று சொன்னார்கள். “நாங்கள் பணத்தை வட்டியுடன் கொடுக்க தயாராக உள்ளோம். எங்கள் நிலத்தை எங்களுக்கு எழுதி கொடுங்கள்” என கேட்டதற்கு சரியான முகாந்திரம் எதுவும் சொல்லாமல் எங்களை அலைக்கழித்தனர். மேலும்
எங்களை சாதி பெயரை சொல்லி இழிவாக திட்டி எங்களை நிலத்தை விட்டு சட்டவிரோதமாக அராஜகத்தில் வெளியேற்ற முயற்சித்து சொத்தினை ஆக்கிரமிப்பு செய்ய ஆட்களுடன் வந்து தகராறுகள் செய்தனர். எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். தீயிட்டு கொளுத்திவிடுவோம் என பயமுறுத்தினர் நாங்கள் இதுகுறித்து புகார் செய்ததில் பாலவிடுதி போலிசாரிடம் புகார் செய்தோம். அவர்கள் மீது வழக்கு பதியபட்டது. ஆனால் மேற்படி வழக்கில் தங்கள் செல்வரக்கை பயன்படுத்தி பினையில் வந்து சட்டம் தங்கள் கைக்குள் இருப்பதாக சொல்லி கொண்டு எதிரிகள் மேலும் மேலும் எங்களிடம் தகராறுகள் செய்து வருகின்றனர். மேலும் கடனாக வாங்கிய ரூ.14லட்சத்திற்கு வட்டியுடன் சேர்த்து ரூ.60லட்சம் கொடுத்தால்தான் சொத்தினை எழுதிகொடுப்போம் என்றும் மீட்டர் வட்டியில் கணக்கு போட்டு கேட்கிறார்கள்.
இது சம்மந்தமாக நாங்கள் பலமுறை மாவட்ட கலெக்டரிடமும், காவல் கண்காணிப்பாளர், பாலவிடுதி போலீசார் மாநில காவல் ஆய்வாளர் என எல்லா உயர் அதிகாரிகளிடமும் புகார் கொடுத்து விட்டோம் ஆனால். தீர்வு ஏற்படவில்லை என தெரிவித்தார்.

