தவெக MLA-க்கள் 60 பேர் அதிருப்தியில் உள்ளதாகவும், அவர்களே தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த போகிறார்கள் என்றும் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (நவ.18) பேட்டியளித்த அவர், இந்த அதிருப்தி MLA-க்களின் நடவடிக்கையால் தற்போதைய அரசு கவிழ்ந்து, மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்படும் சூழல் உருவாகும் என்று ஆரூடம் கூறியுள்ளார். மேலும், ஆளுநர் ஆட்சிக்கு பிறகு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்பது உறுதி எனவும் அவர் நம்பிக்கை கூறியுள்ளார்.
தவெக MLA-க்கள் 60 பேர் அதிருப்தியில் உள்ளனர்: ரகுபதி பேட்டி
