650 கிடாக்கள் வெட்டி ஒரு கிராமம் முழுவதும் வீட்டுக்கு வீடு கம கமக்கும் கறி விருந்து
தஞ்சையை அடுத்துள்ள தோழகிரிப்பட்டி கிராமத்தில் முத்துமாரியம்மன் – அய்யனார் கோயில் திருவிழா 650 கிடாக்கள் வெட்டப்பட்டு, 26 ஆண்டுக்கு பிறகு ஊரே கறி விருந்து வீட்டுக்கு வீடு சாமியானா பந்தல் போட்டு அழைப்பிதழ் கொடுத்து கறிக் குழம்பு, , கறி வறுவல், மீன் குழம்பு மீன் வறுவல் சிக்கன் உள்ளிட்ட அசைவ விருந்து வைத்து கொண்டாட்டம்
நன்றாக மழை பெய்து விவசாயம் செழிக்க 26 ஆண்டுக்கு பிறகு சொந்த பந்தங்களை கறி விருந்து வைப்பதாக கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்:
பேட்டி : 1 கோவிந்தராஜ் – தோழகிரிப்பட்டி விவசாயி
தஞ்சையை அடுத்துள்ள குருங்குளம் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் மற்றும் அய்யனார் கோயில் கிடாவெட்டு திருவிழா 26 ஆண்டுக்கு பிறகு கமகமக்கும் கறிவிருந்தோடு நடைபெற்றது
வீட்டுக்கு வீடு பத்திரிகை அடித்து உறவினர்கள் நண்பர்களை அழைத்து கறிக்குழம்பு, கறி வறுவல், மீன் குழம்பு மீன் வறுவல் என அசைவ விருந்து நடைபெற்றது
ஒவ்வொரு வீட்டு வாசல் முன்பும் சாமியானா பந்தல் அமைத்து விழா விமரிசையாக நடைபெற்றது
26 ஆண்டுக்கு பிறகு நடைபெறும் விழா இன்று முதல் 7 நாட்கள் வரை 7 கிராமங்களில் தடபுடல் விருந்தோடு முத்துமாரியம்மன் ஒவ்வொரு கிராமங்களிலும் நடைபெற உள்ளது.
