திருச்சி பெரிய கம்மாள தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(57). இவர் தனது நகை பட்டறையை நேற்று இரவு பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலை வந்து பார்த்த போது, கடையின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கடையில் இருந்த 7¼ பவுன் எடையுள்ள 26 ஜோடி கம்மல்கள், ரூ.51,000 திருட்டு போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
