மதுரை மாவட்டத்தில் 70 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாள்தோறும் காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைகளுக்கு வருவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவும் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் கொசு ஒழிப்பு உள்ளிட்ட களத்தடுப்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
