தமிழ்நாட்டில் மதியம் 3 மணி நிலவரப்படிபிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 70%, மேற்கு வங்கம் (முதற்கட்ட தேர்தல்) 78.77% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளன. கடந்த 2021 தேர்தலை ஒப்பிடும் போது இந்த நேரத்திற்கு சுமார் 30% அதிகமாக பதிவாகியுள்ளது. இந்த முறை கண்டிப்பாக 85% வாக்குப்பதிவு தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னை பெரம்பூரில் வாக்குப்பதிவு சதவீதம் இதுவரை 40% தாண்டவில்லை. பொதுவாக 12 மணி முதல் 3 மணி வரை வாக்க பதிவு மந்தமாக பதிவாகும் நிலையில் இந்த முறை தொடர் விறுவிறுப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் மொத்தமாக 5.73 கோடி மக்களில் 40,1,40,000 வாக்களித்துள்ளனர். 4கோடி பேர் வாக்களித்துள்ளனர். தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக நாமக்கல் – 76.43%, கரூர் – 76.08%, சேலம் – 75.79 %, ஈரோடு – 75.61 %, திருப்பூர் – 75.38 % வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 61.95% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2021 தமிழக தேர்தலில் இதே 3 மணிக்கு 53.35% வாக்குகள் பதிவாகி இருந்தது.
