சென்னை தி.நகரில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து சிம்பு தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வாக்களிப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. அனைவரும் மறக்காமல் வந்து வாக்களிக்க வேண்டும்” என்று ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
வழக்கம்போல தனது தந்தை டி.ராஜேந்தர் மற்றும் தாயார் உஷா ராஜேந்தர் ஆகியோருடன் வந்து அவர் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.
இன்று சிம்பு மட்டுமின்றி ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் குமார் மற்றும் சூர்யா உள்ளிட்ட பல முன்னணித் திரைப்பிரபலங்களும் காலையிலேயே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
