ஆசைக்கும் கனவுக்கும் வயது ஒரு தடையில்லை என்பதை 73 வயது பாட்டி பலருக்கும் புரியவைத்துள்ளார். மாடியில் இருந்து எட்டி பார்க்கவே பயன்படும் இளம் பெண்களுக்கு மத்தியில், இமாச்சலில் அசால்ட்டாக பாராகிளைடிங் செய்து மாஸ் காட்டியுள்ளார் இந்த பாட்டி. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, பலரும் பாட்டியின் தைரியத்தை பார்த்து மிரண்டுள்ளனர். தங்களுக்கும் பாராகிளைடிங் செய்யும் ஆசை வந்துவிட்டதாக பலர் பதிவிட்டுள்ளனர்.
