நள்ளிரவில் பெரும்பாக்கத்தில் 85 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த செம்மஞ்சேரி உதவி ஆணையரின் தனிப்படை போலீசார்
*விசாரணையில் புழல் சிறையில் இருக்கும் தம்பதியினருக்கு கஞ்சா விற்பனையில் தொடர்பு என அதிர்ச்சி தகவல்
ஓஎம்ஆர், ஈசிஆர் பகுதிகளில் கஞ்சா விற்பனைக்காக பெரும்பாக்கப் பகுதியிலிருந்து மூட்டை மூட்டையாக கஞ்சா சப்ளை செய்வதாக செம்மஞ்சேரி உதவி ஆணையர் கந்தனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மூட்டை மூட்டையாக கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கஞ்சா விற்பனையை தடுப்பதற்காக கமிஷனர் உத்தரவின் பேரில் செம்மஞ்சேரி காவல் சரக உதவி

ஆணையர் கந்தன் தலைமையில் உதவி ஆய்வாளர் சந்தோஷ் குமார், காவலர் மனோகரன், கார்னேஷ்குமார், சூர்யா ஆகியர்கள் கொண்ட தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர்.
அப்போது ஓஎம்ஆர், ஈசிஆர், பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் கஞ்சா வியாபாரிகளுக்கு கஞ்சா விற்பதற்காக கேரள மாநிலத்தில் இருந்து மூட்டை மூட்டையாக சுமார் 85 கிலோ எடை கொண்ட கஞ்சாவை பெரும்பாக்கத்தில் இறக்குமதி செய்துள்ளனர்
இதை கண்காணித்த உதவி ஆணையரின் தனிப்படை போலீசார் இறக்குமதி செய்த மூட்டை மூட்டையாக 85 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து சரண்ராஜ், ஏமாத்குமார், கௌதம்,சேசுராஜ் ஆகிய 4 நபர்களை கைது செய்தனர்.கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ இருசக்கர வாகன் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் கைது செய்த நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.
பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆன செந்தில் (என்ற) குள்ள கண்ட செந்தில் மற்றும் அவரது மனைவி கலை (என்ற) கலைவாணி ஆகிய இருவரும் கஞ்சா வழக்கில் கைதாகி புழல் சிறையில் உள்ளனர்.
சிறையில் உள்ள இவர்களின் உதவியுடன் இந்த கஞ்சாவை இறக்குமதி செய்ததாகவும் சிறையில் இருந்து கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவுக்கும் சிறையில் இருக்கும் நபருக்கும் தொடர்பு இருப்பதாகவும் போலீசார் விசாரணையில் கூறப்பட்டுள்ளது.
ஓஎம்ஆர், ஈசிஆர் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்பவர்களுக்கு ஒட்டுமொத்தமாக கஞ்சா விற்பனை செய்யும் இடமாக பெரும்பாக்கம் பகுதி உள்ளதால் பெரும்பாக்கம் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இளைஞர்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு காவல்துறையினர் கஞ்சா விற்பனையை கண்காணித்து முழுமையாக கஞ்சா விற்பனையை தடை செய்ய வேண்டும் என்பதே பெரும்பாக்கம் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
பெரிய அளவில் கஞ்சா விற்பனையை தடுத்த செம்மஞ்சேரி உதவி ஆணையரின் தனிப்படை போலீசார்களுக்கு தாம்பரம் கமிஷனர் நஞ்சமல் ஹோடா பாராட்டு தெரிவித்தார்
