Skip to content
Home » 95 பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற நுண் பார்வையாளர்கள் ஒதுக்கீடு..

95 பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற நுண் பார்வையாளர்கள் ஒதுக்கீடு..

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், நுண்பார்வையாளர்களை கணினி மூலம் இறுதி தற்செயல் தெறிவு முறையில் (Final Randomization) ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் போர் சிங் யாதவ் முன்னிலையில் நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி 2024, மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள நுண்பார்வையாளர்களை கணினி மூலம் இறுதி தற்செயல் தெறிவு (Final Randomization) முறையில் ஒதுக்கீடும் செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் போர் சிங் யாதவ் முன்னிலையில் இன்று (17.04.2024) நடைபெற்றது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடைபெறவுள்ளதை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்திலுள்ள 149.அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 306 வாக்குச்சாவடி மையங்களும், 150.ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 290 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மேற்காணும் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர், நிலை அலுவலர் -1, நிலை அலுவலர் -2, நிலை அலுவலர் -3, நிலை அலுவலர் -4 ஆகிய 2909 நபர்களை கணினி மூலம் இறுதி தற்செயல் தெறிவு (Final Randomization) முறையில் ஒதுக்கீடும் செய்யும் பணி இன்றையதினம் நடைபெற்றது.

இதேபோன்று பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள 95 நுண் பார்வையாளர்களை கணினி மூலம் இறுதி தற்செயல் தெறிவு (Final Randomization) முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உமா மகேஸ்வரன், மாவட்ட தகவலியல் மைய அலுவலர் ஜான் பிரிட்டோ, மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!